ஆவடியில் 109வது வார பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

151

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் 19வது வாரம் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று 22.11.2023 போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் இணை ஆணையாளர் டாக்டர். விஜயகுமார் தலைமையில் ஆவடி காவல் ஆணையரக அனைத்து காவல் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட 62 மனுக்கள், காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்த 43 புகார் மனுக்கள் மீது விசாரித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 45 புதிய மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.