திரு­மலா பால் நிறு­வன மேலாளர் தற்­கொலை விவ­காரம்: நவீன் காவல்­து­றையால் மிரட்­டப்­ப­ட­வில்­லை: போலீஸ் கமி­­ஷனர் அருண் விளக்­கம்

80

திரு­மலா பால் நிறு­வன மேலாளர் தற்­கொலை செய்து கொண்ட விவ­காரத்தில் நவீன் காவல்­து­றையால் மிரட்­டப்­ப­ட­வில்­லை என சென்னை மாந­க­ர போலீஸ் கமி­­ஷனர் அருண் விளக்­கம் அளித்­துள்ளார்.

ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொல்லினேனி (37). திரு​மண​மாகி குடும்​பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகரில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்​னை​யில் உள்ள திருமலா பால் நிறுவனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலாளராகப் பணியாற்றி வந்​தார். இந்​நிலை​யில், அண்​மை​யில் திரு​மலா பால் நிறு​வனம் அவர்​களது நிறுவன வரவு, செலவு கணக்​கு​களை சரி​பார்த்து தணிக்கை செய்​துள்​ளது. அப்​போது, ரூ.40 கோடி முறை​கேடு நடை​பெற்​றிருப்​பது தெரிய​வந்​தது.

நவீன் அந்த பணத்தை கையாடல் செய்​த​தாக​வும், அந்த பணத்தை அவரது குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பரின் வங்கி கணக்​குக்கு மாற்றி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக​வும் குற்​றம்சாட்டப்பட்டது. இது தொடர்​பாக அந்​த நிறு​வனம் சார்​பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனிடம் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் நவீனை, நேரில் வரும்​படி கூறி போனில் அழைத்து விசா​ரித்​த​தாக​வும், அப்​போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடு​கிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டாம்’ என போலீ​சாரிடம் நவீன் கெஞ்சி கேட்​டு கொண்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு, அவர் வீட்​டருகே உள்ள குடிசை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடலமாகக் கிடந்​தார். தகவல் அறிந்து புழல் போலீசார் சம்பவ இடம் சென்​று, நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வமனைக்கு அனுப்பி வைத்​தனர். போலீ​சாரின் விசாரணைக்கு பயந்து நவீன் தற்​கொலை செய்து கொண்​டா​ரா அல்​லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்​டன​ரா என்​பது குறித்து போலீ​சார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இந்நிலையில் சென்னை மாந­க­ர போலீஸ் கமிஷனர் அருண் இந்த சம்­ப­வ­த்­திற்கு விளக்கம் அளிக்கும் வித­மாக நிரு­பர்­க­ளுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறி­ய­தா­வது, “திரு­மலா பால் நிறு­வன மேலாளர் நவீன் தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்துகொண்டதாகவே தெரிகிறது. சிலர் தூக்குப் போட்டு தற்­கொலை செய்து கொள்ளும் போது தங்­களை தாங்­களே காப்பாற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக கைகளைக் கட்டிக் கொள்கிறார்கள். இதுபோல சம்­பவம் பல இடங்களில் நடந்துள்ளது. மாதவரம் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் நேரில் அழைத்து விசாரித்ததாக இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. மாதவரம் திருமலா பால் நிறு​வனத்​தின் சட்ட மேலா​ளர் சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில், தங்​கள் நிறுவன நிதிப்​பிரி​வின் கரு​வூல மேலா​ள​ரான நவீன் பொல்லினேனி சுமார் ரூ.44 கோடி மோசடி செய்​த​தாக புகார் அளித்​தார். பொது­ம­க்கள் குறை தீர் முகாமில் புகார் அளித்த போது அந்த புகாரை நான் தான் பெற்று மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீ­ஸ் பிரி­விற்கு விசா­­ர­ணைக்கு அனுப்­பினேன். முதற்­கட்ட விசா­ரணை தொடங்­கிய நிலையில் இந்தச் சம்­பவம் நடந்­துள்­ள­து. சம்­பவம் நடந்த அன்று நான் தான் மாத­­வரம் துணை ஆணையர் பாண்­டி­ய­ரா­ஜனை லீவு கொடுத்தேன். ரூ.44 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை துணை ஆணையர் விசாரித்திருக்க கூடாது. அது தவறு என்பதால்தான், பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். நவீன் அனுப்பிய மின்னஞ்சலில் அவர் காவல்துறை மிரட்டல் விடுத்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. துணை ஆணையர் பாண்டியராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்­வாறு அருண் தெரி­வித்தார்.