47வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் முதல் பரிசை பெற்ற தட்டிய தமிழ்நாடு காவல் அரங்கம்

187

சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்ட 47வது அகில இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் தமிழ்நாடு காவல் அரங்கம் முதல் பரிசை தட்டிச் சென்றது.

சென்னை தீவுத்திடலில் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதியன்று சுற்றுலாத்துறை, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகத்தால் துவங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு காவல் துறை அரங்கம் உள்பட பல அரசு துறைகளைச் சேர்ந்த 53 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. சுற்றுலா பொருட்காட்சி துவங்கப்பட்டு கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு காவல் அரங்கினை சுமார் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். நேற்றுடன் தொழில் பொருட்காட்சியின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் மெச்சத்தக்க வகையில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட காட்சி அரங்கமாக தமிழ்நாடு காவல்துறை அரங்கு தேர்வு செய்யப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் சிறந்த காட்சி அரங்கமான தமிழ்நாடு காவல் அரங்கத்திற்கான பரிசு கேடயத்தை தமிழக காவல்துறை சார்பாக சென்னை வடக்கு மண்டல இணைக்கமிஷனர் ரம்யாபாரதி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசுதுறைகளைச்சேர்ந்த உயரதிகாரிகள், காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.