ஏழைகளுக்கு இலவச உணவு அளித்த சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பு

221

தமிழக முஸ்லிம் ஜமாஅத் மற்றும் சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு சார்பில்
பசித்தோரின் பசியகற்றுவோம் எனும் தலைப்பில் தினமும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உயர் சிகிச்சைக்கு தலைநகர் சென்னைக்கு வரும் நோயாளிகள் மாதக்கணக்கில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. தொழிலுக்கு சென்று குடும்பம் போற்றும் குடும்ப தலைவரே நோய் வாய்ப்பட்டு கிடக்கும் இவ்வேளையில் வருமானம் இல்லாமல் மிகவும் சிரமமப்படும் இவர்களுக்கு ஒரு நேர உணவு கூட மிகப் பெரிய பாரமாக உள்ளது. இந்த நோயாளிகளின் துயர் துடைக்கும் வகையில் தமிழக முஸ்லிம் ஜமாஅத் &சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு இணைந்து தொடர்ச்சியாக கடந்த 300 நாட்களாக காலை உணவு வழங்கி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு உணவு விநியோகம் துவங்கியது. இதுவரையில் எண்பதாயிரம் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனையிலும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த உணவு விநியோக திட்டத்திற்கு சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு தேசிய செயலாளர் எம் கமாலுதீன் ஸகாஃபி அல்ஹிகமி மற்றும் மற்றும் தமிழக முஸ்லிம் ஜமாஅத் சென்னை தலைவர் ஸய்யிது ராஷித் புஹாரி செயலாளர் முஹம்மது ஹாஜி, முஹம்மது அலி ஹாஜி, அப்துல் முஹ்சின், முஹம்மது ஷரீப் ஆகியோர் தலைமை தாங்கினர்.