தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் இன்று (06.12.2023) திடீரென தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்றார். அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மேற்படி காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது தூத்துக்குடி சப் டிவிஷன் டிஎஸ்பி சத்தியராஜ், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல் துறையினர் உடனிருந்தனர்.