ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சங்கர் பொறுப்பேற்றார்

147

சென்னை, ஆவடி புதிய போலீஸ் கமிஷனராக ஏடிஜிபி சங்கர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னையை அடுத்த ஆவடி போலீஸ் கமிஷனராக இருந்த அருண் நேற்று முன்தினம் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டார். அந்த இடத்துக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று சங்கர் ஆவடி போலீஸ் கமிஷனராக சங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். 1996ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் சென்னை நகர செங்கை கிழக்கு எஸ்பி, கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணைக்கமிஷனர் மற்றும் சேலம் உள்ளிட்ட இடங்களில் டிஐஜியாகவும், எஸ்பியாகவும் பணிபுரிந்தவர். கேரளாமாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த சங்கர் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். சந்தீப் ராய் ரத்தோர், அருண் ஆகியோரை அடுத்து ஆவடி போலீஸ் கமிஷனரேட்டின் 3வது போலீஸ் கமிஷனராக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.