சிறுமிக்கு பாலியல் தொல்லை: 51 வயது காமுகனுக்கு 21 ஆண்டு ஜெயில்

119

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்புதுபாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள் (51). இவர் தனது எதிர் வீட்டு 13 வயது சிறுமியை கொரோனா காலத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் 2021 ஆம் ஆண்டு ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சாட்சிகளை முறைப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பெருமாள் என்பவருக்கு

21 ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் ரூ. 6,000 அபராதம் விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் மற்றும் ராணிப்பேட்டை எஸ்பி கிரண் ஸ்ருதி ஆகியோரை வேலூர் டிஐஜி முத்துசாமி வெகுவாக பாராட்டினார்.