ரூ. 4 கோடி போதைப்பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு : அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் நடவடிக்கை
தமிழகம் முழுவதும் அமலாக்கப் பணியக குற்றப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இன்று தீயிலிட்டு அழிக்கப்பட்டன.
போதையில்லா தமிழ்நாடு’ முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் படி தீயிலிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று சுமார் ரூ. 4 கோடி மதிப்புள்ள 112 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3510. 68 கி உலர் கஞ்சா, 860 கிராம் மெத்தம்பெட்டமைன், 239.600 கிலோ கஞ்சா சாக்லெட் போன்ற போதைப்பொருட்கள் தீயிலிட்டு எரிப்பதற்காக கொண்டு வரப்பட்டன. அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றி செங்கல்பட்டு
மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் அவை எரிக்கப்பட்டன. தமிழக அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வுப் பிரிவு கூடுதல் டிஜிபி டாக்டர் ஏ. அமல்ராஜ், ஐஜி செந்தில்குமாரி, எஸ்பி மயில்வாகனன் ஆகியோர் இதில் பங்கேற்று போதைப்பொருட்களை தீயிலிட்டனர். இந்த ஆண்டில் இதுவரை 355 வழக்குகளில் 7139.387 கிலோ உலர் கஞ்சா, 74.150 கி ஹசிஷ், 58 கி சாராஸ், 1 கி ஹெராயின், 241 கிலோ கஞ்சா சாக்லெட்போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினரால் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.