டிஜிட்டல் கைது மூலம் ரூ. 29 லட்சம் அபேஸ்: பலே கில்­லா­டியை ­ வ­ளைத்த சென்னை சைபர்­கிரைம் போலீஸ்

145

ஐ.டி ஊழியரிடம் டிஜிட்டல் கைது என மிரட்டி ரூ. 29.9 லட்சம் பணத்தை ஆட்­டையைப் போட்ட பலே கில்­லா­டியை சென்னை மத்­தியக் குற்­றப்­பி­ரிவு சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­த­னர்.

சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் மல்லிகார்ஜுன். இவ­ரு­க்­கு அழைபேசியில் அழைத்த நபர் தன்னை கூரியர் ஊழியர் என அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளார். பின்னர் மல்­லி­கார்­ஜுனின் ஆதார் எண் போதைப் பொருள் சம்பந்தப்பட்ட குற்றத்தில் ஈடுபட்டு உள்ளதாக கூறி­யுள்ளார். பின்னர் அந்த அழைப்பு மற்றொருவக்கு மாற்றம் செய்யப்பட்டுள்­ளது. அந்த நபர் தன்னை மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என சொல்லி மிரட்­டி­யுள்ளார். மல்­லி­கார்­ஜுனின் வங்கிக் கணக்கிற்கு முறையற்ற பணம் வந்து விட்டதாகவும், டிஜிட்டல் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனால் கைது மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளார். இந்த வகையில் மல்­லி­கார்­ஜுனை மிரட்டி ரூ. 29.9 லட்­சத்தை பெற்று மோசடி செய்­துள்­ள­னர்.

இது குறித்து மல்லிகார்ஜுன் 17.11.2024 அன்று சென்னை போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் புகார் அளித்தார். போலீஸ் கமி­ஷனர் அருண் உத்தரவின் பேரில், மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் க­மி­ஷனர் ராதிகா வழிகாட்டுதலின் பேரில் இன்ஸ்­­பெக்டர் மேனகா தலைமையிலான குழு விசா­ரணை நடத்­தினர். அதனைய­டுத்து புதுச்சேரியை சேர்ந்த ஷாலினி மற்றும் அவரது கணவர் தியாகு ஆகிய இருவரை 06.05.2025 ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

விசாரணையில் இருவரும் புதுச்சேரியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருடன் சேர்ந்து பல வங்கி கணக்குகள் ஓபன் செய்து சைபர் மோசடி மூலமாக பெறப்படும் சட்டவிரோத பணத்தை தங்களது வங்கி கணக்கில் வந்தவுடன் அந்த பணத்தை உடனடியாக வங்கியில் இருந்து எடுத்து அந்த பணத்தை மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டது தெரியவந்தது.

ரமேஷ்குமார் என்பவர் தனது மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவான ரமேஷ்­கு­மாரை 12.06.2025 அன்று சைபர்­கிரைம் போலீசார் திருநெல்வேலியில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரொக்கம் ரூ.79,500 மற்றும் 2 லேப்டாப்கள், 5 மொபைல் போன்கள், Phonepe QR Code ஸ்கேனர்கள், 7 சிம் கார்டுகள் 2-Bank Counterfoils, 2 Bank Challans, 3 Bank Pass Books, 4 Cheque Books, Voter ID Cards, PAN Cards, ATM Cards ஆகியவை கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட ரமேஷ்குமார் நேற்று (13.06.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

பொது மக்களிடம் இதுபோன்று கொரியர் நிறுவனம் அல்லது காவல்துறை அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் அனுப்பி மிரட்டி பணம் கேட்டு தங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு வந்தால் அதை உண்மை என நம்பி யாரும் பணத்தை அனுப்ப வேண்டாம். மேலும் இது போன்ற சைபர் மோசடி குற்றங்கள் பற்றி புகாரளிக்க தாங்கள் உடனடியாக இணையதளம் www.cybercrime.gov.in மூலமாகவும் அல்லது அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அல்லது 1930 என்ற உதவி எண்ணை அழைக்கவும் என சென்னை நகர காவல்­துறை கேட்டுக்கொண்டுள்­ள­து.