கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்

143

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகைகள் கிடைக்கும் வகையில் சமூக நீதி பயன்களைப் பெற இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் இன்று தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் ஒரு அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இதனை எதிர்த்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.