சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (03.07.2023) மதியம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது. சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) லோகநாதன், இணை ஆணையாளர் சாமூண்டீஸ்வரி மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.