பொதுமக்கள் குறைதீர் முகாம்: 34 புகார் மனுக்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­வு

109

சென்னை நகர போலீ­ஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் கமி­ஷனர் அருண் பொதுமக்களின் 34 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் இன்று (02.07.2025) காவல் ஆணையரகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து 34 புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இம்முகாமின் போது சென்னை பெருநகர காவல், துணை ஆணையாளர் (நிர்வாகம்) சுப்புலட்சுமி உடன் இருந்தார்.