பொதுமக்கள் என்னை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம்: டிஜிபி சங்கர்ஜிவால் அறிவிப்பு

193

வார நாட்களில் தன்னை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம் என டிஜிபி சங்கர்ஜிவால் பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர்ஜிவாலை தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த 30ம் தேதியன்று டிஜிபி அலுவலகத்தில் சங்கர்ஜிவால் பதவி ஏற்றார். சென்னை நகரில் சங்கர்ஜிவால் பணியாற்றிய காலத்தில் காவல்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆனதும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிள்ளார். அதில், ‘‘பொதுமக்கள் மற்றும் காவலர்கள் தங்கள் புகார்கள், குறைகள் தொடர்பான மனுக்களை திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர, தினமும் காலை 11.30 மணிக்கு என்னை டிஜிபி அலுவலக பார்வையாளர்கள் அறையில் நேரில் சந்திக்கலாம். தங்கள் புகார் மனுக்களை அளித்து பயன்பெறலாம்’’. இவ்வாறு டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.