போதை விழிப்புணர்வு பிரசாரத்தில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

147

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைபடுத்தும் நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்து, போதையில்லா சென்னை பிரச்சாரத்தை வலியுறுத்தினார்.

கடற்கரையை துய்மையாக வைத்திருப்பது குறித்தும், நெகிழிகளை (பிளாஸ்டிக்) பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பொது மக்களிடையே Indian Maritime Foundation அமைப்பினர் மூலம், கடற்கரையை தூய்மைபடுத்தும் நிகழ்ச்சி (Beach Clean-up Drive) நடத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (15.07.2023) காலை சென்னை, பெசன்ட்நகர், அஷ்டலட்சுமி கோயில் அருகே உள்ள கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடற்கரையை தூய்மைபடுத்தும் நிகழ்வை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், Indian Maritime Foundation நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும், சென்னை பெருநகர காவல் ஆளிநர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ‘போதையில்லா சென்னை’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.