புழல் பெண்கள் தனிச் சிறையின் அருகில் கட்டப்பட்டு வரும் FREEDOM பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ஆய்வு நேற்று (26.06.2023) சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் ரகுபதி புழல் அம்பத்துார் சாலையில், புழல் பெண்கள் தனிச்சிறை அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்பரேசனின் Freedom Filling Station Unit – IIயின் கட்டுமான பணியை ஆய்வு செய்தார்.
இந்த பெட்ரோல் நிலையம் சுமார் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 1170 ச.மீ பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஒரு மாத காலத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெட்ரோல் நிலையமானது பெட்ரோல், டீசல் மற்றும் XP 95-ன் 5 விநியோக பிரிவுகளை கொண்டதாகும். இந்த நிலையமானது புழல், பெண்கள் தனிச்சிறையில் உள்ள 30 பெண் சிறைவாசிகளைக் மூலம் செயல்படும். மேலும், இந்த நிலையம் 20KL பெட்ரோல், 20 KL XP95 மற்றும் 40 KL டீசல் கொள்ளளவும் கொண்டது ஆகும். Freedom Filling Station Unit II கட்டுமான பணியுடன் சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனை நிலையமான “சிறை சந்தையும்” கட்டப்பட்டு வருகிறது.
–
இந்த ஆய்வில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, சிறைத்துறைத் துணைத்தலைவர் (தலைமையிடம்) திரு.இரா.கனகராஜ், சென்னை சரக சிறைத்துறைத் துணைத்தலைவர் முருகேசன், புழல், மத்திய சிறை-2 கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேசன் உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.