உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா

171

உலக வங்கியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியான அஜய் பங்கா ஜூன் மாதம் 2 ந்தேதி பொறுப்பேற்க உள்ளார்.

அமெரிக்காவில் இயங்கி வரும் உலக வங்கியின் தலைவர்களாக எப்போதும் அமெரிக்கர்கள் தான் இருந்து வந்துள்ளனர். தற்போதைய உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ். இவருடைய பதவிக்காலம் முடியும் முன்னரே அந்த பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில் உலக வங்கியின் அடுத்த தலைவராக 63 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக வங்கியின் தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அஜய் பங்காவை உலக வங்கி நிர்வாக இயக்குனர்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். ஜூன் 2ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகள் அஜய் பங்கா உலக வங்கியின் தலைவராக பதவி வகிப்பார். தற்போது அவர் அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.