சுங்கு­நா­த­புரம் முகை­தீன் ஜும்ஆ பள்­ளிவாசல் திறப்பு விழா

94

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுங்குநாதபுரத்தில் புதிதாக முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடை­பெற்­றது. புகாரி ஹோட்டல் உரிமையாளர் ஹாஜா பஷீர் புகாரி தலைமையில் நடந்த இவ்­வி­ழாவில் மவுலவி ஹசன் அலி குர்ஆன் ஷரீப் ஓதினார். ஹாஜா உதுமான், பாக்கர் அலி, இஸ்மாயில் புகாரி, முகம்மது உசேன் ஆகியோர் வரவேற்றுப் பேசி­னர்.

மவுலவி முஸ்தபா வாஹிதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். புதிய பள்ளிவாசல் கட்டிடத்தை தங்கள் செய்யிது அப்துர் ரகுமான் ஆலிம் திறந்து வைத்தார். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முஹ்யித்தீன் ஆலிம் சிறப்புரையாற்றினார். மவுலவி அப்துர் ரகுமான் ஆலிம், ஹாமித் பக்ரி ஆலிம், மவுலவி ஷேக் முகமது, மவுலவி முஜீப் ரகுமான் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பெரியார் பார்வையில் இஸ்லாம், சுவாமி விவேகானந்தரின் பார்வையில் முகம்மது நபி ஆகிய நூல்கள் வழங்கப்பட்டன. ஜமாஅத் ஆலோசகர் உஸ்மான் நன்றி கூறினார். சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளானோர் பங்கேற்றனர். நிறைவாக அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடைபெற்றது. மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கேம்பலாபாத் ஜமாஅத்தினர் மற்றும் சுங்கு நாதபுர ஜமாஅத்தினர் செய்திருந்தனர்.