7 பேர் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

160

சென்னை பெருநகரில் மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி குற்றவாளி உட்பட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக குற்றவாளிகள் சென்னை, சைதாப்பேட்டை, மணிகண்டன் (எ) சோத்தப்பானை, 29, என்பவர் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதால் சைதாப்பேட்டை காவல் நிலையத்திலும், திருச்சி, ராம்ஜி நகரைச் சேர்ந்த சரவணன், 35, கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிலும், பழைய வண்ணாரப்பேட்டை ஐயப்பன் (எ) டேனி, 25 திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதால் கொருக்குப் பேட்டை காவல் நிலையத்திலும், 4.சிலம்பரசன் (எ) தமிழரசன் (எ) பாவாடை, 27, அருண்குமார், 23, டிபி சத்திரம் அப்பாஸ், வ/28, ஆகிய 3 நபர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், G-2 பெரியமேடு காவல் நிலையத்திலும், 7.ஜெகநாதன், வ/51, த/பெ.சீனிவாசன், விஜிபி பிரபு நகர் 4வது தெரு, பெரும்பாக்கம் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதாக கூறி வங்கியில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, ரூ. 1 கோடியே 16 லட்சம் மற்றும் இன்சூரன்ஸ் தொகை ரூ.1,60,354- கடன் (Loan) பெற்று மோசடி செய்தது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்து, மேற்கண்ட 7 எதிரிகளும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் 7 குற்றவாளிகளையும் இன்று (11.07.2023) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.