காயல்பட்டினத்தில் முவ்வொலி நாதாக்களின் கந்தூரி விழா

131

தூத்­துக்­கு­டி, காயல்பட்டினம் முவ்வொலி காதிரியா கொடிமர சிறு நைனார் பள்ளியில் மகான்கள் முவ்வொலிநாதாக்களின் 413 வது கந்தூரி விழா நடைபெற்றது.

எட்டு தினங்கள் நடைபெறும் இவ்விழாவில் தொடக்க நாள் வெள்ளிக்கிழமை மாலை புனித கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்­தது. எட்டு தினங்களும் அதிகாலை கத்முல் குர்ஆன் ஷரீப் ஓதப்பட்டது. மாலையில் மகான் அவர்களின் புகழ்மாலை ஓதப்பட்டது. அதனை தொடர்ந்து இரவில், பள்ளியின் இமாம்கள் அல்ஹாபிழ் அப்துல் காதர் ,மௌலவி முகம்மது அப்துல் காதர் ஆலிம் மஸ்லஹி தலைமையில் எட்டு தினங்கள் சன்மார்க்க சொற்பொழிவு தொடராக நடைபெற்றது. இதில் சொற்பொழிவு ஆற்றிய மார்க்க அறிஞர்கள் சதக்கத்துல்லாஹ் ஆலிம் ஹைரி,செய்யது இஸ்மாயில் ஆலிம் மஹ்ழரி,முகம்மது ஷா மஹ்ழரி, மிஷ்கின் சாஹிப் ஆலிம் ஃபாஸி, காஜாமுஹ்யித்தீன் ஆலிம் மஹ்ழரி,முகம்மது அஸ்பர் ஆலிம் அஷ்ரபி, மொகுதூம் முகம்மது ஆலிம் மஹ்ழரி,முகம்மது முகைதீன் ஆலிம் மஹ்ழரி ஆகியோர் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

கந்தூரி தினத்திற்கு மறுநாள்காலையில் நேர்ச்சை விநியோகம் நடைபெற்றது. கந்தூரி விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் ஜமால் முகம்மது, துணைத் தலைவர் அபு சாலிஹ், செயலாளர் அபுல் ஹசன் துணைச் செயலாளர் குளம் முகம்மது ரிழ்வான் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஜெஸ்முதீன், முகம்மது ஷமீம், மற்றும் நிர்வாகிகள் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தனர்.