பொது­மக்­க­ளுக்கு இல­வச சட்ட உத­வி: தமி­ழ­கத்­தி­ல் முதன்­மு­­றை­யாக கரூர் மாவட்­டத்­தில் அறி­மு­கம்: எஸ்பி ஜோஷ் தங்­கையா புது முய­ற்­சி

79

தமி­ழக காவல்­துறையில் முதன் முறை­யாக வாரந்­தோறும் நடக்கும் குறைதீர் மனு நாள் அன்று பொது­மக்­க­ளுக்கு இல­வச சட்ட உதவி மையம் அமைத்து கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்­கையா புதிய ஏற்­பாடு செய்­திருப்பது பொது­மக்­க­ளி­டையே வர­வேற்பை பெற்­றுள்­ளது.

கரூர் மாவட்ட எஸ்­பி­யாக ஜோஷ் தங்­கையா பொறுப்­பேற்­றதில் இருந்து மாவட்­ட­ காவல்­து­றையில் பல சீர்த்­தி­ருத்­தங்கள் செய்து வரு­கிறார். முதற்கட்ட நட­வ­டி­க்­கை­யாக புகார்தா­ரர்­களின் மனுக்கள் மீது உரிய விசா­ரணை நடத்தி அதன் மீது கால தாம­த­மின்றி வழக்குப் பதிவு செய்து, எப்­ஐ­ஆரை வீடு தேடிச் சென்று தரும் திட்டம் அமல்­ப­டுத்­தப்­பட்­டது. அதற்கு பொது­மக்­க­ளி­டையே நல்ல வர­வேற்பு இருந்­தது. அடுத்­த­ப­டி­யாக தற்­போது பொது மக்­க­ளுக்கு வாரந்­தோறும் இல­வச சட்ட ஆலோ­சனை மையம் ஒன்றும் கரூர் மாவட்ட எஸ்பி அலு­வ­ல­கத்தில் இயங்க உள்­ளது.

எஸ்பி. K. ஜோஷ் தங்­கையா

கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், 3 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் மற்றும் மாவட்ட குற்றப் பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது. வாரந்தோ­றும் புதன் கிழமையன்று எஸ்பி ஜோஷ் தங்­கையா தலை­மை­யில் பொதுமக்கள் குறை தீர்ப்பு மனு நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடக்­கி­ற­து. இந்­தக் கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டு வாடகை, வீட்டு உரிமையாளர் – வாடகைதாரர் பிரச்னை, வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, பெற்றோர்களிடம் சொத்துக்களை பெற்றுக்கொண்டு பின்பு அவர்களை கவனிக்காத புகார்கள் போன்று பல்வேறு உரிமையியல் சம்மந்தப்பட்ட புகார்கள் வருகின்றன.

இந்த பிரச்­சி­னைகள் தொடர்­பாக பொது­மக்­க­ளுக்கு இலவச சட்ட உதவிகள் தேவைப்படுகிறது. இந்­த பிரச்­சி­னை­க­ளுக்­கு தீர்வு காணும் விதமாக கரூர் மாவட்ட ­எஸ்பி ஜோஷ் தங்­கையா, கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மைய தலை­வ­ரை அணுகி இது குறித்து ஆலோசனை நடத்­தினார். அப்போது ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாளில் இலவச சட்ட உதவி அளிக்க ஒருவரை நியமிக்கும்­ப­டி கோரியிருந்தார். அந்த கோரிக்­கையை ஏற்கப்­பட்­டது. அதன்படி நாளை (24.09.2025) முதல் இலவச சட்ட உதவி மையத்திலிருந்து பொதுமக்களுக்கு சட்ட உதவி செய்ய வழக்கறிஞர் ஒருவரை மாவட்ட இலவச சட்ட உதவி மையத்தில் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

தமி­ழ­கத்தில் கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளில் இலவச சட்ட உதவி மையத்திலிருந்து பொதுமக்களுக்கு சட்ட உதவி செய்ய அரசு வழக்கறிஞர் ஒருவரை கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கையா ஏற்பாடு செய்துள்ளது குறிப்­பி­டத்­தக்­க­து. எனவே மனு கொடுக்கவரும் பொதுமக்கள் இலவச சட்ட உதவி பெற்றுக்கொள்ளலாம் என கரூர் மாவட்ட காவல்­துறை சார்பில் தெரிவிக்கப்­பட்­டுள்­ள­து.