சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடி டொக்கன் ராஜா வெட்டிக் கொலை

145

சென்னை மயிலாப்பூர் பல்லக்குமா நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி டொக்கன் ராஜா என்பவரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஞாயிற்றுக்கிழமை 10.7.2023 இரவு வெட்டி படுகொலை செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி டொக்கன் ராஜா. இவர் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் இருக்கிறது. சென்னையில் டாட் டென் ரவுடிகளில் ஒருவனான சிடி மணி என்பவருக்கு இவர் வலது கரமாகச் செயல்பட்டவர். இதற்கிடையே பாஜகவில் சேர்ந்த டொக்கன் ராஜாவுக்கு வடசென்னை பாஜக மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.