செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்றிதழ் பெறும் நடைமுறையினை இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) செயல்படுத்தி வருவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள ஜவுளித் துறையின் பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் கோரிக்கைகள் குறித்தும் அதில் அவர் கூறியுள்ளார்.