25 புகார் மனுக்கள் மனு உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவு

198

பொதுமக்கள் குறை தீர் முகாமில் 25 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் அருண் வாரம் தோறும் புதன்கிழமை அன்று பொதுமக்களின் புகார் மனுக்களை நேரில் பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று வேப்பேரிகமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து 25 புகார் மனுக்களை பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இந்த முகாமின் போது நிர்வாகப் பிரிவு துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி உடன் இருந்தார்.