டிசம்பர் 2ம் தேதி கந்தூரி தொடக்கம்: நாகூர் தர்கா மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது

104

தமிழகத்தில் மிகப்பெரிய தர்காவான நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் நாகூர் ஆண்­­டவர்கள் என அழை­க்கப்­படும் சாகுல் ஹமீது காதிர் வலி கஞ்ச சவாயி ரழி­யல்லாஹ் அன்­ஹு கந்தூரி திருவிழா நாளை மறு நாள் டிசம்பர் 2ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்க இருக்கிறது.

நாகூர் ஆண்டவர்கள் மறைந்து 468 வருடம் ஆகும் நிலையில் இந்த வருட திருவிழா தொடங்குகிறது. நாகூர் தர்காவில் ஐந்து மினராக்கள் உள்ளது, இந்த மினராக்களில் இன்று (டிசம்பர் 2ம் தேதி திருவிழா) தொடக்க நாளாக கொடி ஏற்றப்படும். இதற்கு முந்தைய நிகழ்வான மினராக்களில் பாய் மரம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) காலை 5.45 மணிக்கு தொடங்கியது.

முதலில் சாஹிப் மினராவில் பழக்கவழக்கப்படி பாய்மரம் ஏற்றப்பட்டது , பின்னர் தஞ்சாவுர் மகராஜா கட்டி கொடுத்த பெரிய மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது, அதன் பின்னர் தொடர்ச்சியாக பிற மினராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது.

கந்தூரி விழா சிறப்பு ஏற்பாடுகளை மானேஜிங் டிரஸ்டி செய்யது முஹம்மத் காஜி ஹுசைன் சாஹிப் மற்றும் போர்டு ஆப் டிரஸ்டிகள், நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். நாகூர் தர்கா பிரசிடெண்ட் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த விழா தொடங்கியது. ஏராளனமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். தமிழக அரசு துணை முதல்வர் உத­ய­நிதி ஸ்டாலின் இந்த கந்தூரி விழா ஏற்பாடு சிறப்பு விசிட் செய்து அதன் அடிப்படையில் இந்த வருடம் நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக 100 சிறப்பு பேருந்து விட போக்குவரத்து துறை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் தினந்தோறும் அனைத்து துறைகளையும் தொடர்பு கொண்டு கந்தூரி விழா ஏற்பாடு விஷயங்களை அறிந்து ஆலோசனை வழங்கி சிறந்த முறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் நாகை நகராட்சி அடிப்படை வசதிகளை செய்து தர துரிதமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது