பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் வாழ்த்து

167

கோவை, காந்திபுரம்,- சோமனூர் தடத்தில் தனியார் பஸ்சை இயக்கும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், பிபார்ம் படிப்பில் டிப்ளமோ முடித்துள்ள ஷர்மிளாவின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். தந்தையைப் பார்த்துத் தானும் ஓட்டுநராக வேண்டும் என ஷர்மிளா விரும்பினார். அதன்படி சில காலம் ஆட்டோ ஓட்டுநராகவும், கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்தார்.

கொரோனா காலத்தில் பலரைத் தன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு கோவையின் ‘விவி டிரான்ஸ்போர்ட்’ என்ற தனியார் பேருந்து நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க, இந்த வேலை கிடைத்திருக்கிறது. ஷர்மிளாவின் இந்த சிறந்த சேவையை பாராட்டிய கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.