சென்னை சைபர் கிரைம் போலீசார் அதிரடி: 2 நைஜீரியன்கள் உட்பட 3 பேர் கைது

214

சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 06.05.2023 அன்று அயனாவரத்தை சேர்ந்த ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்த நபருக்கு சமூக வலைதளம் முகநூல் வழியாக அறிமுகம் இல்லாத ஒரு நபர் தான் லண்டனை சேர்ந்த பெண் என்றும் தான் இந்தியாவிற்கு விரைவில் வர இருப்பதால் தனக்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும் என நட்பு ரீதியாக பேசியுள்ளார். தான் நட்பை தொடருவதற்காக பரிசு பொருட்கள் அனுப்பியுள்ளதாகவும், அதற்கான வரி மற்றும் சுங்க கட்டணம் போன்றவைகள் செலுத்த கேட்டு தன்னிடமிருந்து பணம் ரூபாய் 1,22,840 செலுத்த வைத்து, தான் மோசடி செய்யப்பட்டதாக நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுக்கப்பட்ட புகாரின் மீது கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 25.06.2023 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

புலன் விசாரணையில் புகார்தாரர் பணம் அனுப்பிய வங்கி கணக்கு எண் விவரங்கள் மற்றும் புகார்தாரரோடு குற்றவாளி பேசிய மொபைல் எண் விவரங்கள் FACE BOOK ID விவரங்கள் போன்றவற்றை சேகரித்து சைபர்கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் குற்றவாளி பயன்படுத்திய FACE BOOK ID user registration- காக பயன்படுத்திய Mail ID, Phone Number ஆகியவற்றின் IP விவரங்கள் மற்றும் அதன் Network User Id முகவரி ஆகியவற்றை பெறப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் இருந்து கொண்டு செயல்பட்டு வருவது தெரியவந்தது. அதன் அடிப்படையில் உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி மேற்படி குற்றவாளிகளை பிடிக்க கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர், தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு ஹரியானா மாநிலம் பரிதாபாத்திற்கு விரைந்தது.

மேற்கண்ட தனிப்படையினர் ஹரியானா மாநிலம் காவல்துறையினரின் உதவியோடு, இந்த வழக்கின் குற்றவாளிகளான நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் 1) Hugo Francisco, M/A 40, 2) Duru Clinton, M/A.27 மற்றும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 3)Tabitha Anal F/A 32 ஆகிய மூன்று எதிரிகளை 06.07.2023 ம் தேதி கைது செய்து அவர்களிடமிருந்து இந்த மோசடி குற்றத்திற்கு பயன்படுத்திய Cell Phone, laptop, Pen drive, Exitel Router மற்றும் இதர வழக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும், பரிதாபாத நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய ஆணையுடன் 09.07.2023 ம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு சென்னை கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட உள்ளனர்.

சமூக வலைதளத்தில் பொதுமக்களுக்கு ஆசைகாட்டி மோசடியில் ஈடுபடும் இந்த எதிரிகளை, வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் கண்டறிந்து ஹரியானா மாநிலம் பரிதாபாத்திற்கு சென்று எதிரிகளை கைது செய்து வந்த கிழக்கு மண்டல சைபர் கிரைம் தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்கள்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் சமூக வலைதளத்தில் அறிமுகம் இல்லாத நபர்கள் மூலம் கிடைக்கப்பெறும் தகவல் மற்றும் பரிசு பொருட்கள் குறித்த பதிவுகளை தவிர்க்கும்படியும், எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சமூக வலைதளம் மற்றும் ஆன்லைன் மோசடி தொடர்பான குற்றங்கள் குறித்து, 1930 உதவி எண் மூலம் தகவல் அளித்தும், உடனடியாக அருகிலிருக்கும் சைபர் கிரைம் காவல் நிலையங்களை அனுகுமாறும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் சைபர் கிரைம் காவல் நிலையங்களை அனுகுமாறும் பொதுமக்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டார்.