தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் ஆய்வு

177

இன்று 19.07.2023-ம் தேதி ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் கலந்து கொண்டு தாங்கள் அன்றாடம் சந்திக்கும் இடையூறுகள் பற்றி கலந்தாய்வின் பொழுது தெரிவித்தனர். காவல்துறை மூலம் காவல் தொழிற்சாலை பிரதிநிதிகள் தெரிவித்த பிரச்சனைகளை சட்டப்படி நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்க உறுதி அளிக்கப்பட்டது.