ஐஜி பவானீஸ்வரிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த சேலம் டிஐஜி ராஜேஸ்வரி

மேற்கு மண்டல ஐஜியாக இன்று பதவி ஏற்றுக் கொண்ட பவானீஸ்வரிக்கு, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி பூங்கொத்து கொத்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக மேற்கு மண்டல ஐஜியாக பவானீஸ்வரியை நியமித்து தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அதனையடுத்து லஞ்ச ஒழிப்புப்பிரிவு ஐஜியாக இருந்த பவானீஸ்வரி மேற்கு மண்டல ஐஜியாக இன்று செவ்வாய்கிழமை (8.8.2023) பொறுப்பேற்றுக் கொண்டார். மேற்கு மண்டல ஐஜியின் கட்டுப்பாட்டில் வரும் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி இன்று கோவை ஐஜி பவானீஸ்வரியை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து மரியாதை செலுத்தினார்.

 

Comments (0)
Add Comment