நடி­கைகள் குறித்து அவ­தூறு: தனியார் யூ டியூப் சேனல் நெறியாளர் முக்தார், டாக்டர் காந்­தராஜ் மீது வழக்­குப்­ப­தி­வு

தென் இந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் (Gender Sensitisation and Internal Complaints Committee) தலைவர் ரோகிணி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலு­வ­ல­கத்தில் அளித்த புகார் மனுவில், டாக்டர் காந்தராஜ் மற்றும் MY INDIA 24X7 என்ற யூடியூப் சேனல் நெறியாளர் முக்தார் ஆகியோர் பேசிய வீடியோவை பற்றி புகார் அளித்தார்.

07.09.2024ம் தேதி MY INDIA 24X7 என்ற யூடியூப் சேனலில் சினிமாவில் விபச்சாரி நடிகைகள் பட்டியலை வெளியிட்ட டாக்டர் காந்தராஜ் என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் நெறியாளர் முக்தார், டாக்டர் காந்தராஜை நேர்கானல் எடுக்கும் போது, நடிகைகளை விபச்சாரிகள் என்றும் சினிமாத்துறையைச் சார்ந்த ஒட்டு மொத்த பெண்களையும் விபச்சார தொழில் செய்பவர்களாக சித்தரித்து அவர்களை இழிவாக பேசியுள்ளார். நடிகைகளை கொச்சைப்படுத்தும் அந்த வீடியோவை யூடியூப் சமூக வலைதளத்தில் பொது மக்கள் பார்க்கும்படி வெளியிட்­டுள்­ளனர். அது தொடர்­பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் கூறி­யி­ருந்­தார். இந்தப் புகாரின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டு வரு­கின்­ற­னர்.

Comments (0)
Add Comment