சிறப்பாக பணிபுரிந்த சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை பெண் காவலர் N.கலா (பெ.கா.58936) என்பவருக்கு இன்று (12.08.2023) ஜுன் மாதத்திற்கான காவல் நட்சத்திர விருது (Police Star for the month of June-2023) மற்றும் வெகுமதி ரூ. 5,000- வழங்கி பாராட்டினார். பெண் காவலர் கலா, கடந்த 03.06.2023 அன்று, மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் பணியிலிருந்போது, தகராறு செய்து கொண்டிருந்த ஒரு ரவுடியை துணிச்சலுடன் செயல்பட்டு பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதற்காக அவருக்கு நட்சத்திர விருது வழங்கி கமிஷனர் கவுரவித்துள்ளார்.