சென்னை நகரில் மெத்­தம்­பெ­டமைன் கடத்­திய 7 பேர் கும்பல் கைது

28

சென்னை நகரில் ஏஎன்­ஐயூ எனப்படும் போதைப் பொருள் ஒழிப்பு நுண்­ண­றிவுப் பிரிவு தனிப்­ப­டையினரின் அதி­ர­டி நட­வ­டிக்­கையில் 3 இடங்­களில் நடந்த அதி­ரடி ரெய்டில் 33 கிராம் மெத்­தம்­பெ­டமைன் போதைப்­ப­றி­முதல் செய்­யப்­பட்­ட­து.

சென்னை நகரில் போலீஸ் கமி­ஷனர் அருண் உத்தரவின் பேரில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU), பிரி­வினர் நான்கு மண்டல காவல் இணை ஆணையாளர்கள், 12 காவல் மாவட்டங்களில் காவல் துணை ஆணையாளர்கள் தலைமையிலான போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஒருங்கிணைந்து போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து முழுவதுமாக கட்டுப்படுத்திட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

­­வா­­ன­கரத்தில் 13 கிராம் மெத் பறி­மு­தல்

இதன் தொடர்ச்சியாக ANIU காவல்குழுவினர் மற்றும் வானகரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, நேற்று (18.09.2025) போரூர் டோல்கேட், சர்வீஸ் ரோட்டில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த சரண்ராஜ் (36), ரக்சித் ரெக்ஜின் மோகன் (23), ஜமுனா குமார் (27) ஆகிய 3 பேரை பிடித்து விசா­ரணை நடத்­­தி­னர். அவர்களை சோதனை செய்தபோது, மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அத­னை­ய­டுத்து மூவரும் கைது செய்­யப்­பட்டு அவர்களிடமிருந்து 13 கிராம் மெத்தம் பெட்டமைன், 150 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் எதிரி சரண்ராஜ் கார் ஓட்டுநராக வேலை செய்து வருவதும், ரெக்ஷித் ரெக்ஜின் மோன் பி.டெக் படித்து வருவதும் தெரியவந்தது.

சேத்துப்பட்டில் 8 கிராம்

சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு, 13வது அவென்யூ அருகே மெத் கடத்தி வந்த அய­னா­வரம் முகமது ரபி (42) என்ப­வரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் த்தம்பெட்டமைன் வைத்திருந்த புர­சை­­வாக்கம் ஜெயந்தி (33)()அண்­ணா­நகர் மணிமாறன் (31) ஆகிய மொத்தம் 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் விசா­ர­ணையில் மணிமாறன் மீது ஏற்கனவே 1 குற்ற வழக்கு உள்ளது தெரியவந்தது.

சூளைமேட்டில் 12 கிராம் பறி­முல்

சூளைமேடு, வீரபாண்டி நகர் முதல் தெரு சந்திப்பு அருகே மெத்­தம்­பெ­டமைன் கடத்தி வந்த ஜோ பாப்பிஸ்ட் (20), மோவின் லாரன்ஸ் (21) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தக­வலின் பேரில் ஈரோட்டைச் சேர்ந்த டென்­னிஸ் டிசோசா (20), ரனி() (22) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 கிராம் மெத்தம்பெட்டமைன், 150 கிராம் கஞ்சா, 3 ஐ-போன்கள், மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.