சென்­னையில் மௌலித் என்னும் நபிகள் நாயகம் (ஸல்) புகழ் பாடும் மஜ்லீஸ்

8

சென்னை மண்ணடி. அங்கப்பன் நாயக்கன் தெருவில் அமைந்துள்ள மஸ்ஜிதே மாமூர் பள்ளியில் ரபீய்யுல் அவ்வல் பிறை ஒன்று முதல் 12வரை முத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ் பாடும் சுப்ஹான மௌலித் தனி சிறப்புடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியை மௌலவி மொகுதூம் மஹ் ழரி, மௌலவி ஜெய்லானி உஸ்மானி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இறுதி நாளான பிறை 12 புதன்கிழமை 26.8.2026 அன்று காலை 9:30 மணியளவில் நட­ந்­த இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களான மௌலவி இல்யாஸ் காசிமி, மௌலவி மௌலானா ஹஜ்ரத், மௌலவி அலி ஹஜ்ரத் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கசீதாக்கள் பாடப்பட்டன.

மேலும் நிகழ்ச்சியில் சமுதாய தலைவர்கள், புரவலர்கள், இளைஞர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது இஸ்மாயில், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தூத்துக்குடி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பொருளாளர் அணி காயல்ஜெஸ்முதீன், செய்யது முஹம்மது பாகவி, முகம்மது மொய்தீன், சேக்னா லெப்பை, மண்ணடி மௌரூப், பல்லக்கு சுலைமான், மொகுதூம் முகம்மது, நிகழ்வின் தொடராக நன்றி உரையும் துஆ வும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரம் நபர்களுக்கு தப்ரூக் என்னும் நார்சா பிரியாணி வழங்கப்பட்டது.

நிகழ்வுகள் அனைத்தையும் மௌலித் கமிட்டி குழுவினர்கள்.. குளம் முஹிய்தீன் அப்துல் காதர், ஹாஜி கித்ரு முஹம்மது, செய்கு முஹம்மது சாலிஹ், முஹம்மது அபூபக்கர் முத்து வாப்பா, ஹாபிழ் சாகுல் ஹமீது பைசல், முஹம்மது உமர்பாரூக், செய்யது அஹ்மத் புகாரி, மஹ்மூது சுலைமான், அபுல் காசிம், சாலிஹ், முஹம்மது தம்பி ஆகியோர் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்­தனர்.