சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் கமிஷனர் அருண் பொதுமக்களின் 34 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் இன்று (02.07.2025) காவல் ஆணையரகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து 34 புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இம்முகாமின் போது சென்னை பெருநகர காவல், துணை ஆணையாளர் (நிர்வாகம்) சுப்புலட்சுமி உடன் இருந்தார்.