ஆவடி காவல் ஆணையரகத்தில் பல்வேறு சமுதாய நலப்பணிகள் பொது மக்களுக்காக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை பெற்ற 1,127 மனுக்களில் 622 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று நடத்தப்பட்ட 162 புகார் மனுக்களில் 111 மனுக்கள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 39 புதிய மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண கமிஷனர் சங்கர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.