திருப்பத்தூரில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்: டிஐஜி முத்துசாமி நேரில் ஆய்வு

178

வேலூர் சரக டிஐஜியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில்- காவல் நிலையங்களில் முறையான தீர்வு காணப்படாத மனுக்கள் மீது மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

வேலூர் சரக டிஐஜி முத்துசாமி,  எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் -திருப்பத்தூர் மாவட்ட புதிய காவல் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட திருப்தி பெறாத 12 மனுதாரர்களையும், எதிர் மனுதாரர்களையும் நேரில் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள டிஐஜி முத்துசாமி சரக டிஎஸ்பிக்களுக்கு உத்தரவிட்டார். இம்முகாமின் போது பொதுமக்களிடம் இருந்து புதியதாக 39 புகார் மனுக்கள் நேரடியாக பெறப்பட்டன.

மேலும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்பி அலுவலகத்தில் நடைபெறும். மனுக்களின் விசாரணையில் திருப்தி பெறாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என டிஐஜி முத்துசாமி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் இன்று டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்,
காவலர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் பங்கேற்றனர்.