ரூ. 26 கோடியில் கைதிகளுக்கு புதிய உணவு முறை: அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

162

சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு முறையில் கோதுமை, ராகி உப்புமா, சண்டல் போன்ற புதிய வகை உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கடந்த ஏப்ரம் மாதம் சட்டமன்றத்தில், சிறைத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, சிறைவாசிகளின் நலனுக்காக நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிறைவாசிகளின் உணவுமுறை மற்றும் உணவின் அளவினை, ஆண்டுக்கு ரூ. 26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புழல் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு புதிய உணவு முறை மற்றும் உணவின் அளவினை மாற்றியமைக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்படி சிறைக்கைதிகளுக்கு கோதுமை, ராகி உப்புமா, வேர்க்கடலை சுண்டல் ஞாயிற்றுக் கிழமைகளில் அசைவ உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி, டிஐஜிக்கள் கனகராஜ், முருகேசன் மற்றும் கண்காணிப்பாளர்கள், கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.