புறாக்களை வளர்க்கும் போது ஜாக்கிரதை: டாக்டர்கள் எச்சரிக்கை

179

புறாக்களின் எச்சங்களை சுவாசிப்பது மிகப்பெரிய தீங்கை விளைவித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:- புறாக்களின் இறக்கையில் இருக்கும் செல் பூச்சிகள், எச்சங்களில் இருந்து வெளிவரும் பூஞ்சைகள் ஆகியவற்றை சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் செல்கிறது. இது நாளடைவில் நோய் எதிர்ப்பு திறனை குறைக்கிறது. நுரையீரலில் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டறிவது கடினம் என்பதால் தொற்றுகள் நுரையீரல் திசுக்களை செயலற்றதாக்கி விடுகிறது. இது போன்ற பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. புறாக்களின் எச்சங்களால் 60-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. எனவே புறாக்களை கையாளும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். புறாக்களுக்கு உணவளிக்கும் போதும், எச்சங்களை அகற்றும் போதும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தில் கை வைக்கவோ, உணவு சாப்பிடவோ கூடாது. புறாக்களின் எச்சங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் மறந்து விடக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.