அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்

151

அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு இன்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். போட்டியின்றி அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் பூங்கொத்து, சால்வை கொடுத்து உற்சாகத்துடன் வரவேற்றார்கள். எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுவை 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிந்தார்கள். அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டார்கள்.- அண்ணா தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் வருகிற 26ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.