செங்குன்றத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆவடி காவல் ஆணையரகம் நடவடிக்கை

159

சென்னை, செங்குன்றத்தில் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஆவடி காவல் ஆணையரக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுபடி. நேற்று 27.04.2023-ஆம் தேதி செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் மற்றும் செங்குன்றம் பகுதிகளில் அதிரடி கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. அப்போது செங்குன்றம் பேருந்து நிலையம், V.P. பால் ஷாப் அருகே சந்தேகத்துடன் வந்த இரண்டு நபர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது சுமார் 7 கிலோ 100 கிராம் கஞ்சா என்னும் போதைப்பொருளை, அவர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் தேனி, உத்தமபாளையத்தைச் சேர்ந்த மகேந்திர பிரபு (41), நிஷாகரன் (23) என்பது தெரியவந்தது. ஆந்திரா மாநிலம் அனப்பள்ளி என்ற இடத்தில் மொத்தமாக கஞ்சா வாங்கி கொண்டு தேனி மாவட்டத்தில் தனது வீட்டருகே சிறிது சிறிது பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வருவதாக பரபரப்பு தகவல்களை வெளியிட்டனர். அதனையடுத்து செங்குன்றம் மதுவிலக்கு ஆய்வாளர் முனியசாமி இருவரையும் கைது செய்தும், அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரும் பொன்னேரி 2வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.