செம்பியம் பகுதியில் வாலிபரை கத்தியால் தாக்கிய 6 பேர் கைது

163

சென்னை, பெரம்பூர், ரமணா நகர், ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் ராமன், 28. கடந்த 17.07.2023 அன்று மதியம் பெரம்பூர், SSV கோயில் 3வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 8 பேர் கும்பல் முன்விரோதம் காரணமாக மேற்படி இராமனை வழிமறித்து கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். தாக்குதலில் இரத்த காயமடைந்த இராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இது குறித்து ராமன் என்பவர் செம்பியம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

 

செம்பியம் காவல் நிலை ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட பெரம்பூரைச் சேர்ந்த சூர்யா, 23, முத்து, 35, சரவணன், 35, ஆனந்த், 31, வெங்கடேசன், 37, சிவகுமார், 30 ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கத்திகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் காயமடைந்த ராமன் கடந்த 03.07.2023 அன்று ராஜா என்பவரை கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராஜாவின் உறவினர்கள் மேற்படி இராமனை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளது தெரியவந்தது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்ற 2 குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி 6 நபர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.