சென்னை, சைதாப்பேட்டை மற்றும் அடையார் பகுதிகளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 நபர்களை போலீசார் கைது செய்து 4 கிலோ 750 கிராம் கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை, அடையாறு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (25.04.2023) சைதாப்பேட்டை, ரயில் நிலையம் அருகில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில், சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த யைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (19), தூத்துக்குடி மாவட்டம் 2.அருண்குமார், வ/19, த/பெ.முருகன், எண்.8/525, சவேரியார்புரம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல, அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (25.04.2023) அடையார், காந்தி நகர் 2வது மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அடையாறு, மல்லிகைப்பூ நகரைச் சேர்ந்த பிரதீப்குமார் (21) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 550 கிராம் கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.