கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம்- அபராதம் விதித்து திண்டுக்கல் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Enforcement Bureau Crime Investigation Department
போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் அமலாக்கப்பணியக குற்றப்புலனய்வுப் பிரிவு போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தும் குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர். டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் மேற்பார்வையில், ஐஜி செந்தில்குமாரி வழிகாட்டுதலின் பேரில் போதைக்கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் போதைக்கடத்தலில் ஈடுபட்டு கைதான குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தகுந்த தண்டனை பெற்றுத்தருவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

பொன்னாங்கண்
திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியன்று வத்தலக்குண்டு வழி திண்டுக்கல் ரோடு, பேகம்பூர் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பொன்னாங்கண், ஜெயபாஸ் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேற்கண்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் 09.04.2025 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கஞ்சா கடத்தி வந்த முதல் குற்றவாளி பொன்னாங்கண் என்பவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட புலன்விசாரணை மேற்கொண்டு மற்றும் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஐர் செய்து நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த புலன்விசாரணை அதிகாரிகள் மற்றம் ஆளிநர்களை அமலாக்கப்பணியக கூடுதல் டிஜிபி அமல்ராஜ் மற்றும் ஐஜி செந்தில்குமாரி ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.