உலக பெண்கள் மாநாடு: மாமல்லபுரம் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை

Women -20 Summit (the first G-20 Meeting) மாநாடு மகாபலிபுரம் பகுதியில் 2 நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Women-20 summit (the first G-20 Meeting) வரும் 15-6-2023 மற்றும் 16-6-2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த Women-20 summit மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அனைவரும் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர். எனவே, 14.-6.-2023 முதல் 17.-6.-2023 வரை 4 நாட்கள் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரதிநிதிகள் வருகை / தங்கும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர்கள் பயணம் செய்யும் வழிதடங்கள் சிகப்பு மண்டலமாக (Red Zone) அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் 14.-6.-2023 முதல் 17.-6.-2023 வரையில் டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

 

Comments (0)
Add Comment