சென்னை பெருநகர காவல் குதிரையேற்ற போட்டியின் 3வது மற்றும் நிறைவு நாளில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 20.02.2024 அன்று மாலை, புதுப்பேட்டை, சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வளாகத்தில் டிஜிபி சங்கர்ஜிவால் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் முன்னிலையில், “முதலாவது சென்னை பெருநகர காவல் குதிரையேற்ற போட்டி-2024” (First Greater Chennai Police Equestrian Championship-2024) துவக்கி வைத்து, ‘‘குதிரையேற்ற பயிற்சி பள்ளியை‘‘ (Horse Riding School) திறந்து வைத்தார்.
3வது மற்றும் நிறைவு நாளான 22.02.2024 அன்று 1.Show Jumping 110 CM – 120 CM (Open), 2.Sequential Relay (Open), 3.Preliminary/Children Dressage (Open), 4.Mental Hazard (Open and Youth), 5.Medley Relay (Open and Youth) ஆகிய 5 போட்டிகள் நடைபெற்றது. மேற்கண்ட போட்டிகளில் Tamilnadu Police Equestrian, Chennai Equitation Centre, NCC, Red Earth Riding School, Hindustan Institute of Technology and Science, Officer Training Academy, Chennai Riding School ஆகிய அணிகளை சேர்ந்த குதிரையேற்ற வீரர்கள் அவர்களுடைய குதிரைகளுடன் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் முன்னிலையில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும், இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் வென்ற கீழ்கண்ட வெற்றியாளர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் கோப்பைகள் வழங்கினார்.