வேலூர் மாவட்டம் கணியம்பாடி வனச்சரகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் வனச்சரகர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் இன்று அதிகாலை 3 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் விரட்டிச் சென்றனர். திருவண்ணாமலை, கீழ்சார்னாங்குப்பத்தைச் சேர்ந்த சுதாகர் (வயது 23) என்ற நபரை 9 நாட்டுத் துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் கைது செய்தனர். துப்பாக்கிகள் அனைத்தும் அனுமதி பெறாத கள்ளத் துப்பாக்கிகள் என தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களையும் தேடி வருகின்றனர்.