ரூ. 65 லட்சம் சொத்­தினை போலி ஆவணம் மூலம் ஆட்­டை­­யயைப் போட்ட இருவர் கைது: சென்­னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீஸ் நட­வ­டிக்­கை

ரூ.65 லட்சம் மதிப்புள்ள சொத்தினை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 2 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்­த­னர்.
சிவ­கங்கை, மாவட்டம், காரைக்­குடியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் (63). அவருக்கு சொந்தமாக சென்­னை பள்ளிக்கரணை, கண்ணதாசன் நகரில் 2,400 சதுரடி நிலம் உள்­ளது. சுமார் ரூ. 65 லட்சம் மதிப்புள்ள இந்தச் சொத்தினை சந்துரு, பெருமாள் உள்ளிட்ட நபர்கள் சேர்ந்து பொய்யான ஆவணங்கள் தயார் செய்து சொத்தினை அபகரித்துள்­ள­னர்.  இது தொடர்­பாக கடந்த 01.10.2024 அன்று புகார் அளித்தார்.
கமி­ஷனர் அருண் உத்­த­ரவின்பேரில் மத்­திய குற்றப்­பி­ரிவு கூடுதல் கமி­ஷனர் ராதிகா வழி­காட்­டு­தலின் பேரில், உதவி ஆணையாளர் வரதராஜன், ஆய்வாளர் முருகேஸ்வரி புலன் விசாரணை நடத்­தி­னர். அத­னை­ய­டுத்து மேற்­கண்ட ஆள்மாறாட்டம் செய்து, போலியான பத்திரங்களை பதிவு செய்த குற்றத்தில் தொடர்புடைய சென்­னையை அடுத்த கோவி­லம்­பாக்­கத்­ததைச சேர்ந்த சந்துரு என்பவரை கடந்த 07.07.2025 அன்றும், பெருமாள், 42 என்பவரை நேற்று (08.07.2025) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எதிரிகள் சந்துரு மற்றும் பெருமாள் ஆகிய இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவு எதிரிகளை பிடிக்க காவல்குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெருநகரில் சொத்துக்கள் வாங்கும் நபர்கள், விற்பனை செய்யப்படும் நிலத்தின் ஆவணங்களை சம்மந்தப்பட்ட சார்பதிவாளர் மற்றும் வருவாய் துறை அலுவலகங்களில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து சொத்துக்கள் வாங்கிட சென்னை பெருநகர காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.
Comments (0)
Add Comment