விபத்தில் இறந்த பெண் தலைமைக்காவலர் குடும்பத்துக்கு தாம்பரம் போலீஸ் காவல் ஆணையரகம் சார்பில் ரூ. 34 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
கடந்த 18.01.2023 தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ஷீலா ஜெபமணி வாகன விபத்தில் சிக்கி பின்பு சிகிச்சை பலனிற்றி இறந்து விட்டார். அவரது குடும்பத்திற்கு ஜெபமணி வங்கிக் கணக்கு வைத்திருந்த ஆக்சிஸ் வங்கியில் இருந்து காப்பீடு தொகையான ரூ. 30 லட்சம்- அவரது குடும்பத்தினருக்கு அவரது கணவரிடம் தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில் அளிக்கப்பட்டது. மேலும் ஷீலா ஜெபமணியின் இரண்டு குழந்தைகளுக்கு படிப்பு செலவிற்காக தலா ரூபாய் 4,00,000- என மொத்தம் ரூபாய் 34 லட்சம் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. வங்கி அதிகாரிகளிடமிருந்து விரைந்து கிடைக்க காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் முன்னிலையில் AXIS Bank அதிகாரிகளிடமிருந்து பெற்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் காவல் இணை ஆணையர் மூர்த்தி மற்றும் தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் ஆகியோர் இருந்தனர்.