இன்று 12.07.2023-ம் தேதி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆவடி போலீஸ் கன்வென்ஷன் சென்டரில், நடைபெற்றது. இக்குறைத்தீர் முகாமில் தீர்வு காணப்படாத 128 புகார் மனுக்களில் மனுக்களில் 97 மனுக்கள் விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு முடிக்கப்பட்டது.
பொதுமக்களிடம் காவல் ஆணையாளர் நேரடியாக பெற்ற 73 மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆவடி இணைக்கமிஷனர் விஜயகுமார், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் 400 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.