அம்பத்தூர் மசாஜ் சென்டரில் விபசாரம்: 3 பேர் கைது: அழகிகள் மீட்பு

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட அம்பத்தூர், சிவானந்தா நகர், 2வது மெயின் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் விபச்சார தடுப்புப்பிரிவு ஆய்வாளர் மல்லிகா மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள MANTRA Spa & Saloon-ஐ திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு பாரதிநகரைச் சேர்ந்த ராஜேஷ் (47), அண்ணனூர் காயத்ரி (23), விக்னேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்ததுது. அதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் புழல் சிறையில் அடைத்தனர். பெண்கள் மூவரும் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

 

Comments (0)
Add Comment