காவலர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி உதவி: கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்

தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை செலவு தொகை ரூ. 16 லட்சம் மற்றும் விபத்தில் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு விபத்து காப்பீடு தொகை ரூ. 70 லட்சம், இறந்த தலைமைக்காவலர் குடும்பத்தினருக்கு 1999 பேட்ஜ் காவலர்கள் அளித்த ரூ. 13 லட்சம் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக ரூ. 1,35,400- உள்பட மொத்தம் ரூ. 1 கோடி நிதி உதவிக்கான காசோலைகளை கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்.

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உடல் நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கான தொகையினை தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும், அமைச்சுப்பணியாளர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து (Tamilnadu Police Benevolent Fund – TNPBF) மொத்தம் ரூ. 16,30,975/- ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று (06.05.2023) காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்படி மருத்துவ சிகிச்சை தொகை ஒதுக்கீடு பெற்ற காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அலுவலர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை தொகைக்கான வரைவோலையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த சண்முகம் என்பவர் கடந்த 04.09.2022 அன்று வாகன விபத்தில் உயிர் இழந்தார். இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் HDFC வங்கியில் சம்பள கணக்கை வரவு வைத்து பராமரித்து வந்தார்.

கமிஷனர் சங்கர்ஜிவால் வழிகாட்டுதழின் பேரில், HDFC வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் காவல் ஆளிநர்கள் வாகன விபத்தில் இறந்தால், அவர்களுக்கு சேர வேண்டிய காப்பீடு தொகை ரூ. 70 லட்சத்தை, இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் குடும்பத்தினருக்கு பெற்று தர காவல் அதிகாரிகள் HDFC வங்கிக்கு ஆவணங்களை அனுப்பியதன் பேரில், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் குடும்பத்தினருக்கு விபத்து காப்பீடு தொகை ரூ. 70 லட்சம் வழங்க அனுமதிக்கப்பட்டு கமிஷனர் சங்கர்ஜிவால் இன்று (06.05.2023) சண்முகத்தின் மனைவி ரஞ்சனியிடம் ரூ. 70 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

மேலும் சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்த வெங்கடேசன் கடந்த 21.12.2022 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துவிட்டார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் குழந்தை உள்ளது. மேற்படி தலைமைக்காவலரின் குடும்பத்திற்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் பணியாற்றும் 1997 (2nd Batch) பேட்ஜ் காவல் ஆளிநர்கள் அவர்களது சுய விருப்பத்தின் பேரில் அளித்த ரூ. 13,54,000- மற்றும் சென்னை பெருநகர காவல் சார்பாக ரூ. 1,35,400- ஆகிய காசோலைகளையும் தலைமைக்காவலர் வெங்கடேசன் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் J.லோகநாதன், இ.கா.ப., மற்றும் காவல் துணை ஆணையாளர் (தலைமையிடம்) திரு.இராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
*****

Comments (0)
Add Comment